@tamilcinemareview

To access Karthik Subbaraj's Filmmaking Masterclass check out : 
https://rebrand.ly/KS-Prashanth

USE CODE: Prashanth50

@Saravanavelu-k2g

அட்டக்கத்தி தினேஷ் ஹரிஷ் கல்யாண் நடித்த லப்பர் பந்து அருமையான படம் பிடித்துக் காட்டி மிரட்டி விட்டார் இயக்குனர்தனி பாராட்ட வேண்டும்

@jcoimbatore8045

The Director is my friend. Tamilarasan ...Great da ❤

@balasubramaniansivam8759

இத்தகைய திரைப்படங்களை திரையரங்கில் சென்று பார்ப்பதே நாம் நல்ல படங்களுக்கு நாம் கொடுக்கும் ஆதரவு.

@jarnamhar

I thought of watching it in OTT but after rave reviews, I booked this Saturday with family😊

@karthikgm6704

ipo tha movie pathutu vantha.....really sema superb movie very clean script and screenplay........Hats off to entire team ❣❣❣

@KuttyYuvarajVj7

ஹரீஷ் கல்யாண் நல்ல படங்களை தேர்தெடுத்து நடிக்கிறார் ✨💫

@m.prakashmani5161

Cricket Fan Ellarkum Kandipa 2 Scenlela Azukai Varum 
1 Dada T Shirt Kalatti Lordsla Celebration Pannardhu .
2 Cricket Edhuku Pudikumnu Kaali Avar Sollara Kaaranam 
Enaku Kannula Thanni Vanthuruchu Semma Flim 
Must Watch it Thetare ❤

@k.fathurrahman4434

நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்துடன் பார்க்கும் வகையில் வந்துள்ள படம்

@s.syedibrahim8900

My fav Attakathi❤❤❤ ...
Flim fulfilled for me while Captain BGM starts❤❤❤Gethu Dinesh

@mohanavelduraiswamy5807

லப்பர் பந்து

இயக்குநருக்கு இது எத்தனையாவது படம்  என்பது தெரியவில்லை. வெற்றிமாறன் படங்களில் பார்க்காத திரைக்கதை நேர்த்தியும் தெளிவும், ரஞ்சித் படங்களில் பார்த்திராத ஆர்ப்பாட்டமில்லாத நுட்பமான அரசியலும் இந்தப்படத்தில் இருப்பது ஆச்சரியம். 

இருட்டில் நடக்கும் கதை, கள்ளக்கடத்தல், போதை மருந்து, மாஃபியா, நட்சத்திர நடிகர்களின் ஹீரோயிசம், குறியீடு காட்சிகள், பேன் இந்தியா டார்கெட்டுகள்  என்று எதுவுமே இல்லாமல் சாதாரண மனிதர்களின் வாழ்வியலை அப்பட்டமாக பிரபலிக்கக் கூடிய அடக்கமான அசல் தமிழ் சினிமா. 

அதே நேரத்தில் சுவாரசியத்துக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல், ஒரு இடத்தில் கூட தொய்வில்லாமல் அரங்கத்தில் பார்க்கத் தேவையான சர்வ லட்சணங்களையும் கொண்ட படமாக இது வந்திருக்கிறது.

குறிப்பாக கதையில் பெண் கதாபாத்திரங்களை வலிமையானவர்களாக அழுத்தமானவர்களாக எழுதியிருப்பது தற்போதைய சூழலுக்கு மிகவும் ஆரோக்கியமானதொரு நிகழ்வு.

படத்தின் ஒரிஜினல் இசையையும் இசையமைப்பாளரையும் கூட மிஞ்சுமளவிற்கு ஒரு 'பொட்டுவச்ச தங்கக்குடம்' பாட்டும், ஒரு 'எனக்கென பிறந்தவ..ரெக்கக்கட்டி பிறந்தவ பாட்டும் ஆதிக்கம் செலுத்துகிறது என்றால் அதுதான் நமது பழைய இசையமைப்பாளர்களின் கெத்து 🔥

தினேஷ் மற்றும் ஹரீஷ் கல்யாண் இருவருக்குமான ஒப்பனை பிரமாதம். அவரவர் அசல் பின்புலங்களை மறக்கடிக்கச் செய்து படத்தின் பாத்திரங்களாக அவர்களை நாம் பாவித்திட அது பெரிதும் உதவியிருக்கிறது. இருவருமே மெச்சக்கூடிய அளவிற்கு கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.

தினேஷிற்கு மனைவியாக வரும் அசுதாவின் பாத்திரப்படைப்புதான் இந்தப்படத்தின் நங்கூரம். பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்கிற அளவுக்கு அவரது நடிப்பும் அழுத்தமான முறைத்தபடியான பார்வையும், ஆளுமையும். 

அவருக்கான ஆரம்பக்காட்சி விஜய் அஜீத் பில்டப்புகளையும் விஞ்சி நிற்கிறது. கணவனை பொட்டிப் பாம்பாக்கி சுருட்டிக்கொண்டு அங்கிருக்கும் அத்தனை பேரையும் கண்களிலேயே மிரட்டிவிட்டு, ட்ரக்கை ஓட்டி அவர் உழுதுவிட்டுப்போன கிரிக்கெட் பிட்ச்சில் லப்பர் பந்து என்கிற டைட்டிலை பொருத்திய இயக்குநரின் யோசனை தாறுமாறு. அங்கேயே மனிதர் ஜெயித்துவிடுகிறார்.

***

நாற்பது வயதைக் கடந்த நம் எல்லோருக்குள்ளேயும் ஒரு கெத்து பூமாலை இருக்கிறான். நாற்பது வயதைத் தாண்டி பேரன் பேத்தி எடுக்கும் நிலையிலும் கிரிக்கெட் தாகம் நமக்குள் எஞ்சி மிச்சமிருப்பது நம் வீட்டுப் பெண்களுக்கு தாய் தாரத்திற்கு புரிவதில்லை. கையில் கர்ச்சீப்பை சுற்றிக் கொண்டு வெறியுடனும் தீராத வேட்கையுடனும் தன்னம்பிக்கையுடனும் கிரீஸில் நிற்கும் பூமாலை நம்மில் ஒவ்வொருவரையும் அப்பட்டமாக பிரதிபலிக்கிறான்.

அவமானம், சுயமரியதைக்கு இழுக்கு, சாதிக்க முடியாததால் கிடைக்கும் வலி என்று பூமாலை பாத்திரம் ஏற்கும் அனைத்தையும் நாமும் சுமந்துகொண்டு காலத்தை கடத்திக் கொண்டிருப்பதால் அவனுக்குள் நம்மை மிகச்சரியாக பொருத்திக் கொள்ள முடிகிறது. அவனது கருமையும் வெண்மையும் கலந்த கத்தையான தாடி நமக்கு பல கதைகளை சொல்லாமல் சொல்லிவிட்டுப் போகிறது.

மனதிற்கு பிடித்த விளையாட்டு ஒரு போதை. மனிதனின் அனைத்து உணர்ச்சிகளுக்குமான அருமருந்து. அதில் கிடைக்கும் உற்சாகமும்,போராட்ட குணமும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் வேறு எதிலும் நம்மால் பழக முடியாதவை. சமூக ஒருங்கிணைப்பு நிகழ இன்றளவும் முக்கியக் காரணி.

இதன் மூலமாக படத்தைப் பார்த்த பெண்மணிகளுக்கு ஒரு கோரிக்கை. வீட்டில் புருஷனோ மகனோ அல்லது பல்லு போன தாத்தாவோ கிரிக்கெட் ஆடுகிறேன், ஃபுட்பால் ஆடுகிறேன், பேட்மிண்டன் கற்றுக்கொள்கிறேன் என்று கிளம்பினால் பர்மிஷன் கேட்டால் தயவுசெய்து தடுக்காதீர்கள். மனமுவந்து அனுமதியுங்கள். கண்டதையும் சொல்லி அவர்களைக் குற்ற உணர்வுக்கு ஆளாக்காதீர்கள். விளையாட்டு பொழுதுபோக்கோடு பொறுப்பையும் சேர்த்தே கற்றுத்தரும்

@muniyappana.s2579

ஆபாசம் இல்லாத அற்புதமான படைப்பு.

@rajmani2676

எல்லா படங்களுக்கும் மார்க் குடுதிங்கனா நல்லா இருக்கும் என்பது எனது கருத்து.........

@VUP_Tamil

3.04 Jenson Diwakar Anna ❤ Mr.Prasanth... you will not forget his name hereafter. You will remember. Wonderful actor ❤

@babuperiyasamy2453

அட்டகத்தி தினேஷ் இனி கெத்து தினேஷ் ஆவார் நல்ல திரைப்படம்

@amuthanpandi4256

முழுக்க முழுக்க இது எங்க ஊர்ல எடுக்கப்பட்ட படம் தொழுதூர் மற்றும் திட்டக்குடி சரோண்டிங் எடுக்கப்பட்ட படம்

@gowthamanchockalingam6549

Indian 2, goat  மாதிரி பீ படத்துக்கு போய் ஏமாந்த நோந்த ரசிகர்கள் சார்பில் லப்பர் பந்து மிகப்பெரிய அளவில் வெற்றி அடைய வாழ்த்துக்கள் .

@Livelong341

Mr. பா ரஞ்சித் இந்த படத்த பார்த்து கத்துக்கோங்க.... "அடுத்தவர் மனதை காயப்படுத்தாமல் சாதி ஒழிப்பு பற்றி இப்படத்தில் பேசியதை "

@Sharjudan

Thank you so much for the film i played cricket for my school college team's...took me back to 1996 ..... was crying while watching this movie so many emotions.....i remembered my team my team mates..... Trichy Airport...Bishop Heber...my friends.. Miss you All...

@Vaathi100

Prashant bro.. இல்ல. இனிமே  Mr .Prashant. Good and humble reviews recently.